பஸில் மீது வைத்த நம்பிக்கை-எரிபொருள் நிலையங்கள் வெறிச்சோடின!

கொழும்பில் பிஸியாக காட்சியளித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சராக பஸில்  ராஜபக்ஷ பதவியேற்றால் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று பல அமைச்சர்களும் அண்மைய நாட்களாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் நிதியமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு வைத்ததால் பலரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லவில்லை என்றே கூறப்படுகின்றது.

You May also like