பஷில் பதவியேற்ற போது அதனை பகிஸ்கரித்த அமைச்சர்கள்!

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்த போது அந்நிகழ்வை பகிஸ்கரித்த மூன்று உறுப்பினர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் சபையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அமைச்சர் உதய கம்மன்பில சபா மண்டபத்தில் இருந்துள்ளார்.

இதேவேளை குறித்த அமைச்சர்களும் உறுப்பினரும் 20ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like