15 வயது சிறுமி விவகாரம்- கைதாகியவர்களுக்கு பிணை!

15 வயது சிறுமியை இணையத்தளம் ஊடாக அவரது தாயிடமிருந்து பணம்கொடுத்து வாங்கிப் பாலியல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை மருத்துவர், பிரதேச சபையின் துணை தவிசாளர் மற்றும் 2 இரத்தின வியாபாரிகள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் சுரண்டலுக்காக கைது செய்யப்பட்ட இவர்ளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

You May also like