இந்தியா உட்பட நாடுகளிலிருந்து இலங்கை வர அனுமதி!

பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு  திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸினையும் பெற்றிருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

You May also like