பிள்ளையானுக்கு இராஜாங்க அமைச்சு? பட்ஜட்டில் 73 வீதம் ஒதுக்கீடு!

வருகின்ற வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் அமைச்சரவை மாற்றமொன்று நிகழவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் முஸ்லிம் எம்.பிக்கள் சிலருக்கும் பதவிகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு, பாதுகாப்பு மற்றும் அரச உயர்மட்டத் தரப்பினரை உள்ளடக்கி 73 சதவீத ஒதுக்கீடுகள் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like