அரச ஒடுக்குமுறையை எதிர்த்து சஜித் அணி வழக்கு!

சுகாதார வழிகாட்டல்களை பயன்படுத்திய அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பு வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களை பயன்படுத்தி அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்வதற்கும் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதனால் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்ப்பினை வழங்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருண, மயந்த திசாநாயாக்க ஆகியோர் மனுவை தாக்கல் செய்தனர். இதன் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், சுகாதார பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

You May also like