ஹஜ்ஜூப் பெருநாள் குறித்து வந்த விசேட அறிவிப்பு

முஸ்லிம்களின் புனித துல் ஹிஜ்ஜா மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் இன்று தென்படவில்லை என பிறைக்குழு அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1442 துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று மஃரிபு தொழுகையைத் தொடர்ந்து இடமபெற்றது.

பிறைக்குழுத் தலைவர் மௌலவி றிலா தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இதன்படி, ஹிஜ்ஜா மாத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், புனித துல் கஃதா மாதத்தை நாளை 30 ஆக பூர்த்தி செய்து, எதிர்வரும் 21 ஆம் திகதி புதன் கிழமை, புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாட முடியும் என பிறைக்குழு ஏகமனதாக அறிவித்துள்ளது.

பிறை பார்க்கும் இன்றைய மாநாட்டில், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மற்றும் ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like