யாழில் போராட்டம் இடைநடுவே நின்றது!

அரசாங்கத்திடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், கொரோனாவை காட்டி எங்களை வதைக்காதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையை உடனே குறை’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த யாழ்ப்பாண காவல்துறையினர் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.

You May also like