மருந்து உட்பட பொருட்கள் தட்டுப்பாடு விரைவில்?

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் கடன் பத்திரம் வழங்குவதை நிறுதிவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

வணிக வங்கிகளின் இந்த தீர்மானம் காரணமாக மருந்து இறக்குமதி, அத்தியாவசிய பொருள் இறக்குமதி என பல பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் மருந்து உட்பட பல பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like