கொழும்பு நகரை அண்மித்து தொற்றாளர்கள் பலர்-அதிகாரிகள் கவனயீனத்தில்?

பானந்துரை சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகளவில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அடையாளமிடப்படாத காரணத்தினால், இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பொது சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிடவில்லை என்றும் அப்பகுதியில் வசிப்போர் கூறுகின்றனர்.

You May also like