அரச அமைச்சர்கள் இருவரிடையே மோதல்-அமைச்சுக்களை மாற்ற யோசனை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சினை தொழிலமைச்சின் விடயதானங்களிலிருந்து நீக்கி வெளிவிவகார அமைச்சுடன் இணைத்துக் கொள்ளும்படி அதன் இராஜாங்க அமைச்சரான பிரியங்கர ஜயரத்ன அரச உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இவரது இராஜாங்க அமைச்சு தொழில் அமைச்சிங்கு கீழ் உள்ளது.

கடந்த  சில வாரங்களாக தொழில் அமைச்சின் உயரதிகாரிக்கும், இராஜாங்க அமைச்சுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேதான் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் தொழிலமைச்சுக்குக் கீழ் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சினை மீளப்பெற்று வெளிநாட்டு விவகார அமைச்சுடன் இணைக்கும்படி இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கேட்டுள்ளார்.

 

You May also like