சீகா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து இருப்பதாக வந்தது எச்சரிக்கை!

கொரோனா தொற்றையடுத்து இந்தியாவில் பரவ ஆரம்பித்துள்ள சீனா வைரஸ் இலங்கையிலும் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்த வைரஸ் தற்போது அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையிலும் இந்தத் தொற்று பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சிறுவர் நோய் பற்றிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளை இலக்கு வைத்து இந்த சீகா வைரஸ் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகளால்  பரவுகின்ற இந்த சீனா என்கின்ற வைரஸினால் இதுவரை 13 பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நேற்றுவரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20ஐ கடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கேரள மாநிலத்திலிருந்து ஒருவர் ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்தால் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்படும் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

You May also like