பஷில் குறித்து விமலின் நிலைப்பாடு; சட்டமூலத்தை எதிர்க்க முடிவு?

இரட்டை குடியுரிமை கொண்ட எவரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பஷில் ராஜபக்ஷ அல்லது வேறெந்த நபரையும் குறிப்பிட்டு சொல்லாமல் இரட்டை குடியுரிமை கொண்டவர்களையே தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எந்த பதவியையும் எவருக்கும் அளிக்க அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் பஷில் ராஜபக்ஷவுக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டது.அது சரியா இல்லையா என்று எமக்கு வாதிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை சேர் ஜோன் கொத்தலாவல கஃல்லூரி சட்டமூத்தில் தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அனுமதிக்கும் யோசனையை அரசாங்கம் நீக்கவிட்டால் அந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

You May also like