புத்தளம் நகர சபை தலைவர் கைது

புத்தளம் பிரதேசத்தில்  இடம்பெற்ற தாக்குதல் சம்பம் தொடர்பில் புத்தளம் நகரசபை தலைவர் உட்பட மற்றுமொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

புத்தளம்  சேதவத்த பகுதியில்  நேற்று இரவு  இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இளைஞர்கள்  இருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பில் புத்தளம் நகரசபை தலைவர் பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் புத்தளம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May also like