மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படலாம்?

உரிய முறையில் சுகாதார நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகமும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

புதிய சுகாதார நெறிமுறைகள், வழிகாட்டல்களுக்குக் கீழ் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டமைக்கு, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது காரணமாகவில்லை.மாறாக நாட்டில் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

You May also like