இன்று முதல் மேலும் சில ரயில் சேவை!

மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதான ரயில் மார்க்கத்தில் 36 ரயில் சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 42 ரயில் சேவைகளும், களனி வழி மார்க்கத்தில் 10 ரயில் சேவைகளும், சிலாபம் வழி மார்க்கத்தில் 15 ரயில் சேவைகளும், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ரயில் நிலையத்துக்கு வருகைதரும் பொழுதும், ரயில் நிலையத்தில் இருக்கும் பொழுதும், ரயிலில் பயணத்தின் போதும் பிரயாணிகளை சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைபிடிக்குமாறு ரயில்வே திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துளளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கு எதிர்வரும் வாரம் பெரும்பாலும் அனுமதி கிடைக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May also like