அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சமுதித்தவிடம் நாளை விசாரணை

சுதந்திர ஊடகவியலாளரும், ஹிரு தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சி, அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் ஈடுபடுபவருமான சமுதித்த சமரவிக்ரம, விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய நாளை புதன்கிழமை அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஹிரு தொலைக்காட்சியில் அண்மையில் இடம்பெற்ற பத்தரிகை நிகழ்ச்சியில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர் சமுதித்த தெரிவித்த கருத்து பாதுகாப்புப் பிரிவினருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்து பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிலியந்தல பொலிஸாரினால் குறித்த ஊடகரின் வீட்டிற்கு சென்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவித்தல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.

You May also like