கொழும்பு, கம்பஹாவில் டெல்டா தொற்று அச்சம்-பலரது மாதிரிகள் பரிசோதனைக்கு…!

கொழும்பு மற்றும் கம்பஹாவில் டெல்டா தொற்று மேலும் பரவலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு உட்பட பல இடங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள பலரது மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார்.

கொழும்பு மாநகர சபைப் பிரதேசத்திற்குட்பட்ட 25 பேரில் 14 பேரது மாதிரிகள் டெல்டா பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

You May also like