ரணில், ரத்தன தேரரின் பதவிகளை பறிக்கும்படி வழக்கு!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வினிவித முன்னணி என்ற கட்சியின் செயலாளரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இன்று செவ்வாய்க்கிழமை இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய நியமித்த காலத்தில் குறித்த இருவரும் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் அவர்களது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை.

இது அரசியலமைப்பிற்கு முரண் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like