பெற்ற குழந்தையை கொன்று எரித்த தாய் கைது-இலங்கையில் சம்பவம்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சிசுவொன்றினை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டில் சிசுவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்ரஸாநகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே, நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர், வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட  சிசு, பெண் குழந்தையெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like