கடந்த 7 மாதங்களில் எத்தனை பேர் விபத்துக்களில் பலி தெரியுமா?

கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தற்போதுவரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 1,266 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த விபத்துக்களில் 7,177 பேர் காயமடைந்திருக்கின்றார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

அதேவேளை  வீதிவிபத்துக்களால் நேற்று மாத்திரம் 10 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதனடிப்படையில் நோக்குகையில் வருடாந்தம் சுமார் 3,650 பேர் வரையில் உயிரிழக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.

You May also like