செப்டம்பரில் நாடு முழுமையாக திறப்பு- அறிவித்தார் இராணுவத் தளபதி!!!

கோவிட் பாதிப்புக்களில் அசாதாரண ரீதியில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று புதன்கிழமை பகல் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாரிய அளவில் மாற்றம் ஏற்படாவிட்டால் செப்டம்பர் அளவில் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். கோவிட் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டவர்களுக்கும் நாட்டைத் திறக்க எதிர்பார்க்கின்றோம் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

You May also like