நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி முடிவெடுக்க கூட்டத்தை கூட்டுகிறார் ஜனாதிபதி!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி பேச்சு நடத்தி ஆளுங்கட்சி சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சந்திப்பு வருகின்ற 18ஆம் திகதி மாலை 06 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருகின்ற 19ஆம் 20ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் இதற்கெதிராகவே அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like