இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி!

இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள உயரதிகாரிகளை அவசர பேச்சு ஒன்றை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்திருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் குழுவுக்கும் இதற்கான அழைப்பு சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர் தோல்வி, அணிக்கும், சபைக்கும் இடையேயான முரண்பாடுகள் என பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி இவ்விசேட அழைப்பை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like