இன்றுமுதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாண எல்லைகள் திறப்பு!

மாகாணங்களுக்கு  இடையிலான பொது போக்குவரத்து சேவை  அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும்.  

அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து  அமுலில் இருக்கும் என;றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை  முடக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம்  ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது. 

இதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் இன்று முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

You May also like