ரிஷாட்டின் வீட்டில் தீக்காயத்திற்கு ஆளாகிய மலையக சிறுமி மரணம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிசெய்துவந்த 16 வயது சிறுமி தீக்காயங்களால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – பொறளை பொலிஸார் இந்த தகவலை உறுதிசெய்தனர்.

குறித்த சிறுமி இலக்கம் 410/16, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இல் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஸாட்டிற்கு சொந்தமான வீட்டில் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்துவந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் கடுமையான காயத்திற்குள்ளான சிறுமி கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73ஆம் இலக்க வார்ட் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்த நிலையிலேயே சிறுமி இன்று சிகிச்சைப் பலனின்னறி உயிரிழந்திருக்கின்றார்.

குறித்த சிறுமி ஹட்டன் அக்கரப்பத்தனையிலுள்ள டயகம மேற்கு 03ஆம் பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த இஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயது சிறுமி என்று தெரியவந்துள்ளது.

You May also like