யானைக் கட்சி செயலாளருடன் திகாம்பரம் இரகசியப் பேச்சு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றானிய தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவுடன் சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றார்.

இந்த சந்திப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாகிய ஸ்ரீகொத்தவில் நேற்று மாலை நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், இலங்கைக்குத் திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பையும் நடத்தியிருக்கின்றார்.

பழனி திகாம்பரம் மற்றும் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு பற்றி மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாலித்த ரங்கே பண்டார தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

 

You May also like