மொட்டுக் கட்சியின் தலைமையத்தில் மீண்டும் கொரோனா-ஒருவர் சிக்கினார்!

நிதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பஸில் ராஜபக்ஷவின் கோட்டையாக உள்ள அக்கட்சியின் தலைமையத்தில் கொரோனா அச்சம் தலைதூக்கியுள்ளது.

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று மாலை அலரிமாளிகைக்கு சென்றுள்ளார்.

அதன்போது அவருக்கு அங்கு நடத்தப்பட்ட கொரோனா என்டிஜன் பரிசோதனையில் கோவிட் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பு – பத்தரமுல்லை, நெலும்மாவத்தையில் அமைந்துள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் உள்ள ஊழியர்களுக்கு எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியே முதற்கட்டத்தில் அளிக்கப்பட்டது.

ஆனால் அந்தத்தடுப்பூசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மொட்டுக் கட்சியின் ஊழியர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி அளிப்பதற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like