சம்பந்தன் குழுவுடன் அமெரிக்கா இன்று தீவிரப் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வியாழக்கிழமை காலை சந்தித்துள்ளனர். 

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 

கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உட்பட  முன்னாள் எம்.பி மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like