பஸிலுடன் விமல் மீண்டும் மோதலா? அழைப்பை நிராகரித்தார் என தகவல்!

தொழிற்சாலைத் துறையின் பிரதானிகளுக்கான கூட்டமொன்றை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நடத்திவரும் நிலையில் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரிமாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பிரதான தொழிற்துறையைச் சேர்ந்த 7 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

எனினும் அந்தக் கூட்டத்திற்கு நிதியமைச்சுப் பக்கமாக இருந்து அமைச்சர் விமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் அந்த அழைப்பை பொருட்படுத்தாமல் அவர் தற்போது அம்பாறைக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like