நாளை டெல்டா தொற்று அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை!

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருக்கின்ற 16 பேரது மாதிரிகள் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகளின் இறுதி ஆய்வு முடிவுக்ள நாளை சனிக்கிழமை வெளிவரவுள்ள நிலையில் நாட்டில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போதுவரை 38 டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like