அரச முக்கியஸ்தரின் கைகளுக்கு செல்கிறது ஸ்வர்ணவாஹினி?

இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், அரசாங்கத்தின் மிகநெருக்கமான வர்த்தர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஈ.டி.ஐ வாடிக்கையாளர்கள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிறுவனம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பிரசித்தமான மற்றும் பிரமாண்டமான நிறுவனமாகிய லைக்கா நிறுவனத்தின் பென் ஹோல்டிங்ஸ் என்கிற உள்நாட்டு நிறுவனத்திற்குக் கீழ் உள்ளது.

இதன் தலைவர் அல்லிராஜா என்கின்ற சுபாஸ்கரன். அவர் தற்போது இந்திய சினிமாவில் தயாரிப்பு மன்னராகத் திகழ்கின்றார்.

ஸ்வர்ணவாஹினி நிறுவனமானது அல்லிராஜாவினால் கொள்வனவு செய்யப்பட்டதில் ஊழல்கள் இருப்பதாகத் தெரிவித்து குற்றப் புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like