இலங்கையில் கோவிட் காலத்தில் சரிந்தது குழந்தை பிறப்பு வீதம்!

கோவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு இதில் தாக்கத்தை செலுத்தியதாகவும், அந்தக் காலகட்டத்தில் திருமணங்கள் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுடடி்க்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஒருவருடத்தில் 350000 சிசுப் பிறப்புக்கள் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May also like