துமிந்த நாகமுவ தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை!

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளரான துமிந்த நாகமுவ தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – பல்லேகலையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் தங்கவை்ககப்பட்டிருந்த நிலையில் துமிந்த நாகமுவ உட்பட 06 பேர் விடுதலையாகியிருக்கின்றனர்.

இதேவேளை துமிந்த நாகமுவ தொடர்ந்த மனு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இவர் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாகிய சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்பாக இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே மனுவை விசாரணை செய்வதற்கான திகதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like