ஐ.தே.க செயலரை நேரில் சென்று எச்சரித்த திகா- அதிர்ந்தது சிறிகொத்த!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாகிய ஸ்ரீகொத்தவுக்கு நேற்று முன்தினம் மாலை சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அங்கு நடத்திய பேச்சுக்கள் குறித்த தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

திடீரென சிறிகொத்தவுக்குள் பிரவேசித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திகாம்பரம், கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவுடன் சண்டையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் போட்டியிட்ட தமது கட்சி உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி செய்வதாக வெளியான தகவலையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்தார் திகாம்பரம்.

அவ்வாறான விடயத்தை செய்தால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தக்க பதிலடியை நுவரெலியா மாவட்டத்தில் வழங்குவதாகவும் திகாம்பரம் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த தீர்மானத்தை செய்ய ஐக்கிய தேசியக்  கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் கே.கே. பியதாஸ உள்ளிட்டவர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பாலித்த ரங்கே பண்டார திகாம்பரத்திடம் தெரிவித்ததாக எமது Tamil,Truenews.lk விடம் சிறிகொத்தவின் அதிகாரி ஒருவர் இன்று காலை கூறினார்.

You May also like