யாழில் இன்று ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

You May also like