இலங்கை சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை!!!

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான  விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வகை நோய் தொற்றுக்குள்ளான 34 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நோய் தொற்று குறித்து, பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May also like