கொழும்பிலுள்ள பிரதான பகுதியில் 30 வீதமானோருக்கு டெல்டா?

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் 30 வீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே விசேட அனுமதி பெற்று இந்த பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

தெமட்டகொட என்ற சிறிய பிரதேசத்தில் 30 சதவீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற தரவினை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாவட்டத்தின் நிலைமையை மதிப்பிடுவது கடினமாகும்.

எனினும் எவ்வாறிருப்பினும் டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்கள் சமூகத்தில் நிச்சயம் காணப்படுவர் என்றும் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

You May also like