இலங்கைக்கு அருகே நீர்மூழ்கிக் கப்பலா? மறுத்தது இந்தியா

இலங்கைக்கு மிக அருகிலுள்ள தூத்துக்குடி கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா ஈடுபடுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இந்தியா அரசாங்கம் பதிலளித்துள்ளது.

சிந்துஷாஸ்ட்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பல் இவ்வாறு இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் இந்தியா ஈடுபடுத்தியிருப்பதாக காலைக்கதிர் என்ற யாழ்ப்பாணப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டது.

எனினும் அந்தத் தகவலை இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முற்றாக மறுத்துள்ளது.

You May also like