கம்மன்பிலவை காப்பாற்ற நாளை களமிறங்கும் முஸ்லிம் எம்.பிக்கள் இவர்கள்தான்!

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பலரும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை நேற்றும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்றும் சந்தித்துப் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மாடுகளை அறுக்கின்ற முஸ்லிம் மக்களின் கலாசாரமான குர்பானுக்கு எதிராக அரசாங்கம் தடைவிதிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அதுபற்றி அவர்கள் கலந்துரையாடியிருக்கின்றனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான இஸாக் ரஹ்மான், அலிசப்ரி ரஹீம், நஸீர் அஹமட், முஷரப் மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்களாகிய மர்ஜான் பலீல், அத்தாவுல்லா உள்ளிட்டவர்களே இவ்வாறு அரச தரப்புடன் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் நாளை நடத்தப்படுகின்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக சொல்லப்படுகின்றது.

You May also like