நம்பிக்கையில்லா தீர்மானம்- சம்பந்தன் அணி ஆதரவளிக்க முடிவு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுக்கூட்டம் இன்று பகல் நடந்தது. 

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் Tamil.Truenews.lk செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளாகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் கட்சி என எதிரணியிலுள்ள அனைவரும் இந்த வாக்கெடுப்பில் ஆதரவளித்து வாக்களிக்கவுள்ளனர்.

You May also like