நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றார் கம்மன்பில!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நடந்த நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் ஆதரவாக  61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதேபோல முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சியின் சில உறுப்பினர்களும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இவர்கள் கடந்த 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள் என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

You May also like