5000 ரூபா வழங்கலில் மோசடி இடம்பெற்றது உண்மை-விசாரணை ஆரம்பம்!

கொரோனா தொற்றினால் பயணத்தடை மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வருமானம் இழந்தவர்களுக்கு 5000 ரூபா வழங்கப்பட்ட செயற்பாட்டில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கணக்காய்வாளர் டபிள்யூ. பி.டீ விக்கிரமரத்ன, ஒருசிலருக்கு 5000 ரூபா மட்டுமன்றி அதிகப்பணம் வழங்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதற்தரம் 5000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் பணமும் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

விரைவில் இதுகுறித்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May also like