ஹஜ் பெருநாளை முன்னிட்டு மாடுகளை அறுக்கத் தயாரான பலர் இன்று கைது!

மாடுகளை இறைச்சிக்காக அறுக்க பிரதேச செயலக மட்டத்தில் தடைவிதிக்கப்படவுள்ள நிலையில் ஹஜ் பெருநாளைக்காக மாடுகளை அறுக்கத் தயாராகிய 07 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை – தம்பால பிரதேசத்தில் அரலகங்வில விசேட அதிரடிப் படையினர் நடத்திய அதிரடி தேடுதலில் இவர்கள் கைதாகியிருக்கின்றனர் என்று புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

முறையான அனுமதிப்பத்திரமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாடுகளை அறுப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 25 பால்பசுக்கள் உட்பட 68 மாடுகளை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன் 1000 கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சியும் கைப்பற்றப்ப்டடுள்ளது.

You May also like