அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்க அனைத்துப் பல்கலை பேராசிரியர்களும் தீர்மானம்!

அரசாங்கத்தினால் நிறைவேற்ற முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்ற கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள பேராசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நேற்று அமைதியான போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

கொழும்புப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

எவ்வாறாயினும் ஓகஸ்ட் 03ஆம் திகதி இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like