கட்டுநாயக்கவில் இனி PCR செய்வது ஜேர்மன்தான்- ஒருவருக்கு 40 டொலர் கட்டணம்?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஜேர்மன் நாட்டு நிறுவனமொன்று PCR பரிசோதனைக்கான கட்டிடமொன்றை அமைக்கவுள்ளது.

இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவைக்கு இதன் யோசனையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்திருக்கின்றார்.

இதன்படி ஆய்வுக்கூடத்தை கட்டுவதற்காக விமான நிலையத்திற்குச் சொந்தமான பகுதியில் ஒனறரை ஏக்கர் பிரதேசம் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக 10000 டொலர் மாதாந்த வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, பி.சி.ஆர் மற்றும் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகூட வசதியை அளிப்பதற்காக பயணிகளிடமிருந்து தலா 40 டொலர்களை அறவிட குறித்த நிறுவனம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like