தசுன் ஷானக – ஆர்தர் சண்டை: ஆர்னோல்ட் கண்டனம்

சுற்றுப்பயண இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, களத்தில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இடையே சூடான விவாதம் நடந்துள்ளது. 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராகிய இலங்கையைச் சேர்ந்த ரஸல் ஆர்னோல்ட், உடைமாற்று அறையில் நடக்க வேண்டிய சம்பாசனை மைதானத்தில் இடம்பெற்றிருப்பது தவிர்க்கப்பட வேண்டியதாகும் எனக் கூறியுள்ளார்.

அவர்களுக்கு இடையே பரபரப்பான வாதத்தின் பல புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. 

இந்த போட்டியில் வெற்றிபெற இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் 03 விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த கடுமையான சண்டையின் பின்னர் இந்தியா கடைசி ஓவரை வென்றது.

You May also like