16 நாட்களான சிசுவுக்கு பாலில் நஞ்சுகலந்து கொடுத்த தாய் கைது

பிறந்து 16 நாட்களேயான சிசுவுக்கு நஞ்சுடன் கலந்த பாலை கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு குறித்த சிசுவை அண்மையில் அனுமதித்தார். சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

வைத்தியசாலையில் வைத்து குறித்த 21 வயது தாயாரினால் நஞ்சுகலந்த பாலை குழந்தைக்குக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தாயாரை வருகின்ற 04ஆம் திகதிவரை சிறைவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May also like