விபத்தில் சிக்கினார் தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேக விபத்தில் சிக்கியுள்ளார்.

அவர் இன்று காலை வழமைபோல கொழும்பு பிரிஜட் மடத்திற்கு அருகே சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுகாயத்திற்கு உள்ளாகிய அவர் வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

 

You May also like