முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சஜித்துடன் சங்கமம்!

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நேற்று இணைந்துகொண்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாகப் பதவிவகித்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான நிமல் வெல்கே எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்துறைப் புலனாய்வு மையத்தின் விசேட உறுப்பினர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

You May also like